நாலடியார்: தாளாண்மை (பாடல் 193)
பாடல்
உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
சொற் பொருள் விளக்கம்
உறுபுலி : வலிமையான புலி. உறு என்னும் உரிச்சொல் இங்கு வலிமையை குறிக்கும்
ஊனிரை: இறைச்சி. புலியின் இரை
யின்றி : இல்லாமல் (இல்லாமல் போனால்)
ஒருநாள் : ஒருநாள் (இறுதியில், atlast)
சிறுதேரை : சிறு தவளை(யை)
பற்றியும் : பிடித்து
தின்னும் : தின்னும்
அறிவினால் : தான் கொண்ட கல்வி தகுதியினால்
கால்தொழில் : காலால் செய்யும் அளவே தன்மை கொண்ட தொழில்
என்று : என்று
கருதற்க : கருத வேண்டாம்
கையினால் : கையினால் (உன் கல்வி தகுதி மற்றும் திறமை வெளிக்காட்ட கூடிய)
மேல்தொழிலும் : சிறந்த (பொருள், புகழ் ஈட்ட கூடிய) தொழில்
ஆங்கே : அதில் இருந்தே
மிகும். : வரும்.
கருத்து
வலிமை வாய்ந்த புலி இரை கிடைக்காது போனால், இறுதியில் எளிதாய் அகப்பட கூடிய சிறு தவளையை பிடித்து தின்னும். அப்படி உண்ட சிறிய உணவினால் பெற்ற ஊட்டத்தை (சக்தியை) கொண்டு, அப்புலி ஒரு பெரிய மிருகத்தை தன் இரையாக்கி கொள்ள முடியும்.
அது போல ஒருவன் தான் கொண்ட கல்வி தகுதியினால், காலால் செய்யும் அளவே தன்மை கொண்ட தொழில் என்று எத்தொழிலையும் கருத கூடாது. அத்தொழிலே அவன் கல்வி தகுதி மற்றும் திறமை வெளிக்காட்ட கூடிய, சிறந்த, பொருள், புகழ் ஈட்ட கூடிய தொழிலை பெற்று தரும்.
Labels: நாலடியார்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home