வேல்பாண்டி

வேல் உண்டு வினையில்லை.

Wednesday, April 07, 2010

நாலடியார்: பொறையுடைமை (பாடல் 74)

பாடல்
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது
சொற் பொருள் விளக்கம்
அறிவது அறிந்து : அறிய வேண்டிய உலக நடப்பையும், நூல்கள் இயம்பும் நீதி நெரிகளையும் அறிந்து
அடங்கி : அடக்கமுடையவராய்
அஞ்சுவது அஞ்சி : அச்சப்பட வேண்டிய தீயவைகளுக்கு அஞ்சி, அவற்றை நெருங்காமல், செய்யாமல்
உறுவது : தனக்கு பொருந்திய செயல்களை
உலகுவப்பச் செய்து : உலகம் பயன் பெற்று மகிழும்படி செய்து
பெறுவதனால் : அதை கொண்டு பெற்ற செல்வத்தால்
இன்புற்று வாழும் இயல்பினார் : மகிழ்வுற வாழும் இயல்புடையோர்
எஞ்ஞான்றும் : எந்த காலத்திலும் 
துன்புற்று வாழ்தல் : துன்புற்று வாழ்வது
அரிது : அரிதாகும் (இல்லை)
கருத்து
   ஒருவன் அறிய வேண்டிய உலக நடப்பையும், நூல்கள் இயம்பும் நீதி நெரிகளையும் அறிந்து கொள்ளவேண்டும். அடக்கமுடையவனாய் இருக்க வேண்டும். அச்சப்பட வேண்டிய தீயவைகளுக்கு அஞ்சி, அவற்றை நெருங்காமல், தீயவைகளை செய்யாமல் இருக்க வேண்டும். தனக்கு பொருந்திய செயல்களை, உலகம் பயன் பெற்று மகிழும்படி செய்ய வேண்டும். 
   அவ்வாறு உழைத்து பெற்ற செல்வத்தால் மகிழ்ச்சியாக வாழ பழகி கொள்ள வேண்டும். அப்படி வாழ்பவனுக்கு, எந்த காலத்திலும் வாழ்வில் துன்பம் வருவது அரிதாகும்..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home