இலவு காத்த கிளி
இலவு காத்த கிளி.. இலவு காத்த கிளின்னு ஒரு கிளியோட கத தெரியுமா?
தெரிஞ்சாலும் ரைமிங்கோட நல்ல டைமிங்கோட நான் ஒரு தரம் சொல்றேன் கேளுங்க..
அந்த கிளீ... இலவம் பஞ்சுங்கற ஒரு மரத்துல போய் தினம் ஒக்காருமாம்,
அந்த மரத்துல காயெல்லாம் பச்சை பச்சையா காய்ச்சி தொங்குமாம்.
இது என்னைக்குடா பழுக்கும் அதை கொத்தி கொத்தி திங்கலாம்ன்னு அந்த மரத்துலேயே காத்து காத்து கிடந்துச்சாம் அந்த கிளி பயவுள்ள
திடீர்ன்னு அந்த காயெல்லாம் ஒருநாள் வெடிச்சு, உள்ள இருந்து பஞ்சு பஞ்சா வெளிய வந்துச்சாம்.
அன்னைக்குதான் தெரியும்மாம் அந்த கிளிக்கி அந்த காய் என்னைக்கு பழுக்காது வெடிச்சு, உள்ள இருந்து பஞ்சுதான்டா வரும்ன்னு
வெடிச்சது பஞ்சு மட்டும் இல்ல. அந்த கிளியோட குட்டி நெஞ்சுந்தான்
இதுதான் அந்த இலவு காத்த கிளியோட சோக கதை.
தலைநகரம்: வடிவேலு (நாய் சேகர்) சொன்ன கதை.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home