வேல்பாண்டி

வேல் உண்டு வினையில்லை.

Sunday, April 14, 2013

ஊத்தப்பம் ஆர்டர்

More than a Blog Aggregator




வடி: சார்..

சிலோன்: ஐயையோ.. வாங்க வாங்க. சாப்பிட வந்தீங்களா?

வடி: ஆமாங்க.இது ஓட்டல தானே?

சிலோன்: ஓட்டல்தாங்க. உக்காருங்க.

வடி: சரிங்க.. ஆமா நீங்க யாருங்க?

சிலோன்: நான் ஓனரு.. ஓனரு.

வடி: ஓனரா.. ரொம்ப களையா இருக்கீங்க.

சர்வர். வாங்க வாங்க. வணக்கம் சார்.

சர்வர்: என்ன சாப்பிடுறீங்க

வடி: ஒரே ஒரு ஊத்தப்பம் வேணுங்க.

சர்வர்: ஊ..

வடி: ம்ம்.. ஒரு நிமிஷங்க.. முழுசா கேட்டுட்டு போங்க..

சர்வர்: சொல்லுங்க..

வடி: என்ன பண்றீங்க. ஒரு செம்பு தண்ணி எடுத்துக்குங்க.
அத தோசைகல்லுல ஊத்தி... அதுக்கு வழக்கமா ஒரு வெளக்குமாறு வச்சிருப்பீங்கல்ல..
அத அடிபக்கமா திருப்பி வரட்டு வரட்டு வரட்டுன்னு ஒரு நாலு இழுப்பு இழுத்து நல்லா கழுவி விட்டுருங்க
ஒரு கிண்ணம் நிறைய மாவ எடுத்து பெரிய ரவுண்டாவும் சின்ன ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒடு ரவுண்ட ஊத்தி
நாலஞ்சு வெங்காயத்த இம்புட்ட அள்ளி பொடி பொடியா நறுக்கி அப்படியே மேலாப்பல்ல பறபறபறன்னு தூவி விட்டு
ஒரு நீளமான கேரட்டை எடுத்து அதையும்  பொடி பொடியா நறுக்கி அப்படியே மேலாப்பல்ல பறபறபறப்பா தூவி விட்டு
ஒரு பதினாறு கரண்டி நெய்ய எடுத்து, அதுல ஆறு கரண்டி நெய்ய உள் சைடு அப்படியே லேச வெளாவி விட்டு
பத்து கரண்டி நெய்ய தோசைக்கு வெளி சைடு அப்படியே மேலாப்புல வெளாவி விட்டு
இட்லி பொடி இருக்கு பாத்தீங்களா? அத அப்படியே அள்ளி, மழைச்சாரல் மாதிரி அதையும் மேலாப்பல்ல பறபறபறன்னு அப்படியே பேய்ய விட்டு
பொத்துனாப்புல அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு அப்படிம் பிரட்டிவிட்டு
அப்படியே ரெட்டு கலர்ல முருக முருக முருக விட்டு அழகா மடிச்சி கம கமன்னு ஒரு ஊத்தப்பத்த எடுத்துட்டு வாங்க.

சர்வர்: சரிங்க.. அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...

வடி: அட பிக்காலி பயல. அரை மணி நேரமா கதையா சொல்லிகேன். அம்புட்டையும் கேட்டுட்டு ஒரே வார்த்தையிலே ஊத்தப்பம்-னு போய்ட்டானே..
வரட்டும்.



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home