வேல்பாண்டி

வேல் உண்டு வினையில்லை.

Saturday, June 22, 2013

சாக்ரட்டீஸ்

More than a Blog Aggregator
வணக்கம் தோழர்களே, வணக்கம் என் இனிய ஆசிரியர்களே,
நான்தான் சாக்ரட்டீஸ். கிரேக்க நாட்டின் தத்துவ ஞானி. என் நாட்டு வாலிபர்கள் என்னை சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம்
வார்த்தை அலங்காரம் அல்ல. வளம் குறையா கருத்துக்கள். தரம் குறையா கொள்கைகள். இந்த தரணிக்கு தேவையான தங்கம் நிகர் எண்ணங்கள். அதை உங்களுக்கும் அப்படியே... சொல்லுகிறேன் கேளுங்கள்.

உன்னையே நீ அறிவாய். உன்னையே நீ அறிவாய்.
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாதது அல்ல.
அதற்க்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட நினைப்பது புண்ணுக்கு புணுகு தடவும் வேலையை போன்றது
அதனால்தான் தோழர்களே!
சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று, சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்.
அறிவு! அறிவு! அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்க்காக உங்களை அழைக்கிறேன்.

உன்னையே நீ எண்ணிப் பார்.
எதையும், எதற்காக ஏன் எப்படி என்று கேள்.
அப்படி கேட்டதால்தான் சிலை வடிக்கும் இந்த சிற்பி, சிந்தனை சிற்பியாக மாறினேன்.
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்.
எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்.
அதைத்தான் நான் உங்களுக்கும் இந்த உலகுக்கும் சொல்ல விரும்புவது.

உன்னையே நீ அறிவாய்.
இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதற்க்காகத்தான்,
என் உயிரினும் இனியவர்களே,
உங்களை எல்லாம் அழைக்கிறேன்.
ஏற்றம் மிகு ஏதன்ஸ் நகரத்து எழில் மிக்க வாலிபர்களே!
நாற்றம் எடுத்த சமுதாயதில் நறுமணம் கமழ்விக்க இதோ சாக்ரட்டீஸ் அழைக்கிறேன். ஓடி வாருங்கள்!  ஓடி வாருங்கள்!
வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்.
தீட்டிய வாளும், திணவெடுத்த தோள்களிலே பூட்டிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே!
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி.

அதை எந்நாளும் ஏந்துவோம்!!  நன்றி. வணக்கம்.


http://www.youtube.com/watch?v=AjWRTstLP34&feature=youtu.be&t=2h24m44s

1 Comments:

At 5:45 AM , Blogger வேல்பாண்டி said...

உன்னையே நீ எண்ணிப் பார்.
எதையும், எதற்காக ஏன் எப்படி என்று கேள்.
அப்படி கேட்டதால்தான் சிலை வடிக்கும் சிற்பி, சிந்தனை சிற்பியாக மாறினேன்.
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்.
எவர் சொன்ன சொல்லானாலும் அதை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்.
இதுதான் நான் உலகுக்கும் உங்களுக்கும் சொல்ல விரும்புவது.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home