Role Play: கதை பாத்திரமேற்று நடித்தல் போட்டி: மூன்று பன்றிக்குட்டிகளும், ஓநாயும் கதை
வணக்கம் ஆசிரியர்களே, வணக்கம் தோழர்களே!
"மூன்று பன்றிக்குட்டிகளும், ஓநாயும் கதை"யை நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
நான்தான், அந்த கதையில் வரும் ஓநாய்!
நான் வாழ்ந்து வந்த காட்டுக்கு பக்கத்தில் ஒரு சிறிய ஊர் இருந்தது.
அங்கே மூன்று குட்டி பன்றிகள் இருந்தன.
அவை தங்களுக்கென வீட்டைக் கட்டிக் கொள்ள விரும்பியது.
உடனே முதல் பன்றி, வைக்கோல் வைத்து வீட்டைக் கட்டி முடித்தது.
இரண்டாவது பன்றி,குச்சிகளை வைத்து கட்டி முடித்தது.
மூன்றாவது பன்றியோ செங்கல் வைத்து வீட்டை கட்டி முடித்தது.
காட்டில் உணவு கிடைக்காததால் நான் அந்த ஊருக்கு இறை தேடி வந்தேன்.
நான் பார்த்த முதல் வீடு, வைக்கோல் வைத்து கட்டிய வீடு.
எனக்கோ ரொம்ப பசி. நான் வீட்டு கதவை "டக் டக் டக்" என்று தட்டினேன்.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த பன்றி தெரிந்து கொண்டது, நான் யார் என்று.
அதனால் கதவைத் திறக்கமுடியாது என்று சொன்னது. பசியில் இருந்த நான்,
"நீ கதைத் திறக்கலைன்னா, நான் உன்வீட்டை ஊதியே இடித்துவிடுவேன்,
உன்னை சாப்பிட்டும் விடுவேன்" என்று பயமுறுத்தினேன்.
ஆனால் பன்றியோ, பயப்படவில்லை, "உன்னால் முடிந்தால் செய்துப் பார்" என்று சொன்னது.
உடனே நான் உஃப் என்று ஊதினேன். ஹஹஹா! அந்த வைக்கோல் வீடு இடிந்து ஒடிந்து விழுந்தது.
ஆனால், பன்றியோ பயந்துகொண்டு வேகமாக இரண்டாம் பன்றியின் குச்சி வீட்டுக்கு ஓடியது.
நான் விடவில்லையே.. துரத்திப் போய் அந்த வீட்டு கதவை "டக் டக் டக்" தட்டினேன்.
இந்த பன்றியும் "கதவைத் திறக்கமுடியாது" என்று சொன்னதால்,
உடனே நான் உஃப் என்று ஊதினேன். ஹஹஹா! அந்த குச்சி வீடும் இடிந்து ஒடிந்து விழுந்தது.
இந்த இரண்டு பன்றிகள் பயந்து ஒடுவைதைக் கண்டு சிரித்துக் கொண்டே
ஆணவத்துடன் பின்னாலேயே துரத்தி சென்றேன்.
அந்த இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டிற்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் பூட்டி கொண்டது.
அப்போது ஒன்றும் தெரியாத அந்த மூன்றாவது பன்றியிடம் நடந்தவற்றிப் பற்றி இவ்விரண்டும் கூறியது.
அந்த நேரத்தில் நான் அங்கே வந்தேன்.
கதவை "டக் டக் டக்" என்று தட்டி, "கதவை திறந்து விடுங்கள்" என்று கேட்டேன்.
மூன்றாவது பன்றியும் "உன்னால் முடிந்தால் செய்துபார்" என்று சொன்னது.
உடனே நான் உஃப் என்று ஊதினேன். ஊதினேன். ஊதினேன். ரொம்ப நேரம் ஊதினேன்.
கல்லால் கட்டிய வீடாயிற்றே. ஒன்றும் நடக்கவில்லை.. நாந்தான் களைப்புற்றேன். என் ஆணவம் அடங்கியது
அனால் தோழர்களே,
நான் தோல்வியில் துவளவில்லை.
அந்த வீட்டில் இருந்த பன்றிகளுக்கு கேட்க்குமாறு
தேவைகளே கண்டுபிடிப்புகளின் தாய்.
நம்மை இயற்கையின் மாற்றங்களில் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் பாதுகாத்து கொள்ள தேவையானது,
வலிமையான வீடுதான் என்ற தேவையை மூன்றாவது பன்றிக்குட்டி உணர்ந்தது. அந்த பன்றிக்குடி கற்களால்
ஆன வீட்டை கட்டியது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home