Role- Pay
வணக்கம் ஆசிரியர்களே, வணக்கம் தோழர்களே!
"மூன்று பன்றிக்குட்டிகளும், ஓநாயும் கதை"யை நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
அந்த கதையில் வரும் ஓநாய்தான் நான்!
என் பாத்திரத்தில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க முதலில் அந்த கதையை மிக சுருக்கமாக உங்களுக்கு நினைவூட்டுகிறேன்,
கவனமாக கேளுங்கள்!
நீங்கள் அறிந்த கதைப்படி,
ஓநாய், அதாவது நான்,
முதல் இரண்டு பன்றிக் குட்டிகள் கட்டிய வைக்கோல் வீட்டையும், குச்சி விட்டையும்,
உஃப் என்றும் பஃப் என்றும் ஊதி இடிந்து,
உடைந்து விழ செய்து,
பன்றிக் குட்டிகளையும் சாப்பிட முயச்சித்தேன் என்றும்;
மூன்றாவது பன்றிக் குட்டி கட்டிய வீடு, செங்கலால் ஆனதால்,
என்னால் ஊதி இடித்து தள்ள முடியாமல் போனதாகவும்,
அதனால் நான் கோபம் கொண்டு,
வீட்டின் கூறை மேல் ஏறி புகைபோக்கி வழியாக
குதிக்க,
என்னை எதிர் பார்த்து,
புகைபோக்கிக்கு கீழே உள்ள அடுப்பு மேல் அண்டாவில் கொதிக்கும் வென்னீரை வைக்க,
அதில் நான் விழுந்து, எழுந்து,
தலை தெறிக்க ஓடினேன். அதன் பிறகு மூன்று பன்றிக்குட்டிகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தது, என்று முடிந்திருக்கும்.
அதனாலே என்னை வில்லனாகவும், கெ
இது உங்களுக்கு சொல்ல பட்ட கதை. கட்டு கதை. நான் சொல்கிறேன் உன்மையில் என்ன நடந்தது என்று.
சம்பவம் நடந்த நாள், என் பாட்டியின் பிறந்த நாள். அதற்க்காக நான் கேக் தயாரித்து கொண்டிருந்தேன்.
அன்று எனக்கு கடுமையான ஜலதோசம். அதனால் அடிக்கடி தும்மல் வந்தது. கேக் தயாரிக்க தேவையான சர்க்கரை என் வீட்டில் தீர்ந்து போய் விட்டது.
அதனால் பக்கத்து வீட்டில் போய் கொஞ்சம் சர்க்கரை கடன் வாங்கலாம் என்று வெளியே வந்தேன். பக்கத்து வீடு வைக்கோலால் கட்டிய வீடு.
அது முதல் பன்றிக் குட்டியின் வீடு. நான் வீட்டு கதவை "டக் டக் டக்" என்று தட்டி சர்க்கரை வேண்டும் என்று கேட்டேன். உள்ளே இருந்து பதில் இல்லை. அந்த நேரம் பார்த்து "ஹச்சு..."
என்று பெரிய தும்மல் வந்தது! தும்மிய பின் பார்த்தால் வீடு இடிந்து போயிருந்தது. இடிந்த வீட்டில் பன்றிக் குட்டி ஓடி போய் பக்கத்தில் உள்ள குச்சி வீட்டுக்குள் சென்று விட்டது.
இந்த பன்றி குட்டி, தன் வீட்டிலும் சர்க்கரை இல்லாதலால் அடுத்த வீட்டுக்கு போய் சர்க்கரையை வாங்கி எனக்கு கொடுக்க நினைக்கிறது என்று நான் எண்ணினேன்,
அதனால் அந்த வீட்டு கதவை "டக் டக் டக்" என்று தட்டி சர்க்கரை வேண்டும் என்று கேட்டேன். கேட்ட போதே அந்த கெட்ட தும்மல் மறுபடியும் வந்தது.
தும்மிய பின் பார்த்தால் இந்த வீடும் இடிந்து போயிருந்தது. இப்போது அந்த இரண்டு பன்றிகளும் மூன்றாவது பன்றியின் வீட்டிற்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் பூட்டி கொண்டது.
நானும் அங்கே போய் கதவை "டக் டக் டக்" என்று தட்டிசர்க்கரை கேட்டேன். கதவு திறக்கவில்லை. நான் தும்மியும் பார்த்தேன். செங்கலால் கட்டிய பலமான வீடாயிற்றே. ஒன்றும் ஆகவில்லை.
அதனால் நான் ரொம்ப களைத்து போய்விட்டேன். இப்படி பல வீடு தாண்டி வந்ததால் என் வீட்டுக்கு திரும்பி போக வழி தெரியவில்லை. அதனாலே அந்த வீட்டின் புகை போக்கி மேல ஏறி பார்த்தால் என்
வீட்டை கண்டு பிடிச்சிடலாம் என்று எண்ணி மேலே ஏறினேன். கால் வழுக்கி புகை போக்கி உள்ளே விழுந்தேன். இதுதான் நடந்தது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home