ஓநாய் ஓநாய் ஓநாய்
வணக்கம் ஆசிரியர்களே, வணக்கம் தோழர்களே!
மூன்று பன்றிக்குட்டிகளும், ஓநாயும் கதையிலே வரும் ஓநாய்தான் நான்!
உங்களை சிரிக்க வைத்த பல கதைகளை கேட்டிருப்பீர்கள்.
பொதுவான நீதிகள் பல தந்திருக்கும் அந்த கதைகள்.
ஆனால் என் கதை சிரிக்க வைப்பது மட்டும் அல்ல.
சிந்திக்கவும் வைப்பதாகும்.
நீங்கள் அறிந்த இந்த கதையிலே உங்களுக்கு வில்லனாக காட்ட பட்டவன்தான்
நான்.
பன்றி குட்டிகளின் வீட்டை ஊதி இடித்தேன்.
பன்றி குட்டிகளை சாப்பிடுவேன் என்று மிரட்டினேன்
பன்றி குட்டி வீட்டின் புகைபோக்கி வழியாக குதித்தேன்.
தவறாக சித்தரித்திருப்பார்கள் இப்படியெல்லாம்.
நீங்களும் அதை கேட்டு என்னை கெட்டவன் என்று நம்பி இருப்பீர்கள்.
இல்லை. நிச்சயமாக நான் கெட்டவன் இல்லை.
கட்டிய வீட்டை ஊதி தள்ளினேன்
வீடு கூடாதென்பதற்காக அல்ல.
பலம் இல்லாத வீட்டில் இந்த பன்றிகுட்டிகள் வாழ கூடாது என்பதற்காக.
சாப்பிடுவேன் என்று சொல்லவில்லை ஒன்றாக சாப்பிடுவோம் என்றுதான்
அழைத்தேன்
புகை போக்கி வழியாக குதித்தேன். ஏன்?
கதவை திறக்காத பன்றிகள் பசியுடன் தூங்கிவிடுமே என்பதற்காக
உனக்கேன் இந்த பன்றி குட்டிகளின் மேல் இவ்வளவு அக்கறை என்று கேட்பீர்கள்.
நானும் பசியாக இருந்தேன். அதனால் அவர்களை "சாப்பிட" கூப்பிட்டேன்
என்னை கெட்டவன் என்கிறார்களே.
இந்த கெட்டவனின் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்று தெரியும்.
அன்பு காட்டும் மிருகங்கள் இல்லை நான் வாழ்ந்த காட்டில்.
கொம்பால் முட்டும் காண்டாமிருகங்கள் இருந்தன.
ஓடி பிடித்து விளையாட நண்பன் இல்லை அந்த காட்டில்
ஓங்கி அடிக்கும் சிங்கங்கள்தான் இருந்தன.
கேளுங்கள் என் கதையை.
காட்டிலே பிறந்த நான், மற்ற கொடிய விலங்குகளுக்கு பயந்தும்,
நல்ல உணவு கிடைக்காததாலும்
பக்கத்தில் உள்ள ஓரு ஊருக்கு ஓடி வந்தேன்.
பிறந்ததோ காடு
பிழைக்க வந்த இடமோ நாடு.
அழியும் காடுகளால் அலையும் விலங்குகளின் தலையெழுத்துக்கு நான்
விதிவிலக்கா?
வந்த இடத்தில் பன்றி குட்டிகள் தனி தனியாக வீடு கட்டி அதில் வசிப்பதை
பார்த்தேன். வீட்டின் கதவை தட்டினேன். திறக்கவில்லை
வீட்டின் பலத்தை சோதிக்க,
முதலில் வைக்கோல் வீட்டை ஊதினேன். இடிந்து விழுந்தது
பயந்து ஓடினேன்
பிறகு குச்சி வீட்டை ஊதினேன். அதுவும் இடிந்து விழுந்தது
மிரண்டு ஓடினேன்
செங்கல் வீடு இடியவில்லை. அதனால் புகை போக்கி வழியாக குதித்தேன். கீழே இருந்த கொதிக்கும் வென்னீர் சட்டியில் விழுந்தேன். எழுந்து வலியில்
ஓடினேன் ஓடினேன் நாட்டை விட்டு காட்டுகே ஓடினேன்.
முதலில் நான் காட்டை விட்டு நாட்டுக்கு ஓடி வர யார் காரணம்?
காடே காரணமா? அல்லது காட்டில் நல்லவர்கள் இல்லாதது காரணமா?
நான் வென்னீரில் விழுந்து வலியில் துடிக்க யார் காரணம்?
பன்றிகள் காரணமா? நல்லது நினைத்து வந்த என்னிடம் பன்றிகள் காட்டாத நன்றி காரணமா?
இப்போது சொல்லுங்கள், யார் கெட்டவன்? பாதுகாப்பு இல்லாத வீட்டில் இருந்து பன்றி குட்டிகளை காப்பாற்ற வீட்டை ஊதி இடித்த நான் கெட்டவனா?
வீட்டுக்கு வந்த என்னை வென்னீரில் விழ செய்த பன்றி குட்டிகள் கெட்டவர்களா?
தோழர்களே தீர்ப்பை மாற்றி சொல்லுங்கள்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home