வேல்பாண்டி

வேல் உண்டு வினையில்லை.

Thursday, November 16, 2017

More than a Blog Aggregator

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே..

மேயாத மான், புள்ளி மேவாத மான் !
மேவும் கானடைந்து நறு சந்தனமும்
புனுகும் கமழும் களவங்கள்  அணிந்து
சுணங்கு படர்ந்து - புல் மேயாத மான் !
கானக் குறவ  கண்மணி என வளர்
கானக் குயிலின் நிகர் குரல் உடையது !


மேயாத மான் !


தேனும் பாகும் தினை மாவும் தின்பதல்லால்

புல் ஒரு போதும் மேயாத மான் !

சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் -

அது தலை நிமிர்ந்து பாயாத மான் !


மான் வரக் கண்டதுண்டோ?- ஒரு
மான் வரக் கண்டதுண்டோ ?
பசும் புல் போலே நல் மேனி சுடரிட

அழகிய மான் வரக் கண்டதுண்டோ ?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home