கல்யாண மாலை:
சிங்கப்பூரில் இன்று நடக்கும் இந்த கல்யாண மாலை நிகழ்ச்சியில் வரன் அறிமுகம் இப்போ தொடங்குது.
"இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?
இத தொலைக்காட்சியில் வேற காட்டணுமா?" என்று சிலர் கேட்கலாம்.
ஆனா, கல்யாணத்துக்காக ஒரு பெண்ணையோ, பையனையோ பத்து மனுஷாளோட போய் பார்க்கலாம்.
வீடு பெருசா இருந்தா, ஒரு ஐம்பது பேரோட பார்க்கலாம்.
ஆனா இந்த நிகழ்ச்சியை தொலைகாட்சியில் ஒன்னரை கோடி மக்கள் பார்கிறாங்க.
ஒரு முகத்தை கிட்டக்க (close up) காண்பிச்சா அவர் பொருந்துவாரா மாட்டாரா என்று வீட்டில் இருந்தபடியே முடிவு பண்ண முடியும்.
இதனால் பெண் வீட்டாருக்கு பஜ்ஜி, போண்டா பண்ணுற வேலை மிச்சம் ஆகுது.
இப்படி இதுவரை, இரண்டு லட்சம் திருமணங்களை நடத்தியிருக்கோம்.
இன்னும் பல லட்சம் திருமணங்களை செய்து முடிக்க நாங்கள் காத்துகிட்டு இருக்கோம்.
இப்போ நிகழ்ச்சிக்குள்ள போவோம்.
கல்யாண மாலையில திரு போண்டா பாஸ்கரை அறிமுக படுத்துகிறோம்.
உங்களை பற்றி சொல்லுங்க!
போ.பா: என் பேர் போண்டா பாஸ்கர்.
மோகன்: என்ன பண்ணுறீங்க?
போ.பா: எங்க அப்பா மாதிரி டாக்டர் ஆகணும்ன்னு ஆசை பட்டேன்.
மோகன்: ஓ.. உங்க அப்பா டாக்டரா?
போ.பா: இல்லை. அவரும் டாக்டர் ஆகணும்ன்னு ஆசை பட்டார்.
நான் ஒரு ஓட்டலில் சமையல்காரராக இருக்கிறேன்.
மோகன்: சொல்லுங்க. உங்களுக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்ன்னு எதிர்ப்பார்க்கிறீங்க?
போ.பா:
எனக்கு பேராசை எல்லாம் கிடையாது
வழக்கமா எல்லாரும் கேக்குற மாதிரி
அவ்வளவு செவப்பாவும் இல்லாம
கருப்பாவும் இல்லாம
அவ்வளவு உயரமாவும் இல்லாம
குள்ளமாவும் இல்லாம
நேத்து அரைச்சமாவுல
இன்னைக்கு சுட்ட இட்லி மாதிரி
இருக்கனும்.
மோகன்:
அப்ப சட்னி வேணாமா?
போ.பா: நான் பொண்ணு எப்படி வேணுங்கிறத எடுத்து சொன்னேங்க.
மோகன்:
நீங்க கேக்குற மாதிரி தகுதியோட
நீங்க கேக்குற மாதிரி நல்லா படிச்ச
அழகான பெண்
அமைதியான பெண்
நல்ல அருமையான பெண் உங்களுக்கு கல்யாணமாலை மூலமா உடனடியா வந்து அமையுவாங்க
இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கிட்டதுக்கு நன்றி.
வாழ்த்துகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home