Role Play - Swiper the Fox
வணக்கம். நான் ABCD.
டோரா கதைகளில் வரும் ஸ்வைப்பர் என்கிற முகமூடி அணிந்த நரிதான் நான்.
நரி என்றாலே கதைகளிலே வில்லனாக, திருடனாக சித்தரித்து விடுகின்றனர்.
அது என்னை புரிந்து கொள்ளாதவர்களின் வரட்டு வாதம்.
நான் இன்று நம் Edgefield ஆரம்ப பள்ளி எதை திருட வந்திருக்கிறேன் தெரியுமா?
உங்கள் நல்ல உள்ளங்களை திருடத்தான் வந்துள்ளேன்! (சிரிப்பு)
ஒரு திருக்குறளை சொல்கிறேன்! செவி கொடுத்து கேளுங்கள்!
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
இந்த குறளின் பொருள் (என்ன தெரியுமா தோழர்களே?)
பிறருக்கு உரிய பொருளைச் திருடலாமா என நினைப்பதேகூடக் குற்றமாகும்.
இந்த குறளை தெரிந்த.. புரிந்த.. நான் திருடவும் மாட்டேன்! நான் திருடனும் அல்ல.
ஆனால் நான் ஏன் டோரா கதைகளில் திருடனாக வருகிறேன் தெரியுமா?
சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் திருடுவது தவறான செயல் என்று எடுத்து காட்டுவதற்க்குதான்.
ஆம், புத்தகத்தில் மட்டுமல்ல..
தொலைக்காட்சியிலும் கூட டோராவும் பூட்சும் பயணிக்கும் கதைகளிலே, அவர்கள் என்னை கண்டதும் பயப்படுவார்கள்.
உதவிக்கு பார்வையாளர்களான உங்களை அழைப்பார்கள்.. நீங்களும் swipper திருடாதே போ! என்று கூக்குரலிடுவீர்கள்.
நானும் உடனே 'ஓ மனிதா!' (Oh man) என்று கூறி கொண்டே சென்று விடுவேன்.
கதையிலோ, தொலைகாட்சியிலோ நான் திருடுவது போல வந்தாலும், நீங்கள் டோராவையும் பூட்சையும் காப்பாற்றுமாறு செய்து விடுவேன்.
ஏன் தெரியுமா? அதில் இருந்து துன்ப படுபவர்களுக்கு உதவும் குணத்தை உங்கள் மனதில் உருவாக்க தான்!
இவ்வளவு நல்ல மனம் கொண்ட Swipper, என்னை இனிமேல் திருட்டு நரியாக பார்க்காதீர்கள்
உங்கள் நண்பனாக பாருங்கள். மேன்மேலும் உங்களுக்கு நற்குணங்கள் உண்டாக திருடனாக, தீயவனாக கதையில் வரும் தியாக செம்மலாம் நரியை நாளும் போற்றுங்கள்.
நன்றி. வணக்கம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home