சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
கூடாநட்பு - குறள் 821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கும் பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.
முழுப்பொருள்
உண்மை அல்லாது உறவிலே நேர்மை இல்லாத நட்பு என்பதே கூடாநட்பு. அதற்கு உதாரணம் என்பது கொல்லன் பயன்படுத்தும் பட்டடை என்கிறார் திருவள்ளுவர்.
கொல்லன் இரும்பை அடித்து வளைக்கும் கல் அடைகல், அல்லது பட்டடைக் கல் எனப்படும். கொலைக்களத்து சிரத்தை வெட்டுங்கல்லும் அதே போன்றதே. இரண்டுமே நம்மை தாங்கும் சுமைதாங்கிக் கற்களாய் தோன்றினும், தக்கநேரத்தில் நம்மை துன்புறுத்துவனவே. சிலநேரம் நம்மை வெட்டி எறிந்துவிடும்.
அதுப்போல நம்முடன் உள்ளத்தால் உண்மையான அன்புக்கொள்ளாமல் நம்மை தாங்கும் சுமைதாங்கிப் போல நம்முடன் நட்புக்கொள்ளுவோர் இனிதாக பேசுவர் ஆனால் நம்மிடன் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்ப்பர். இஃது பட்டறையில் உள்ள அடைகல் போன்று நம்மை தாங்கிக்கொண்டு பின்பு நம்மை அடித்து (அவர்கள் தேவைக்கு ஏற்ப) வளைப்பர் அல்லது கொல்லுவதற்கு சமம். இது நமக்கு துன்பத்தையே தரும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home