சிங்கம் மார்க் அப்பளம்
https://www.youtube.com/watch?v=HFPt-DfJS9A
போராட்டம் ஓயவில்லை
நானும் ஓய்வெடுக்க போவதில்லை
drums
அப்பளம் வாங்கும்போது மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
drums
மற்றொருவர்:
நாங்க எப்படி ஏமாறுறோமுன்னு எடுத்து சொல்லுங்க
முதல் மோசடி... தரம்! மூலிகை கலந்த அப்பளம்-னு சொல்லி விக்குறாங்க. கடிச்சு சாப்பிடுற அப்பளத்துக்கு எதுக்குய்யா முப்பது வகை மூலிகை? மூலிகையில செய்ய இது என்ன முடி வளருற தைலமா? அப்பளத்தோட தரம் அதோட மூலப் பொருட்களில் உள்ளது. சிங்கம் மார்க் அப்பளம்தான் உயர் ரக உளுத்தம் பருப்பால் ஆனது. புரத சத்து மிக்கது.
மற்றொருவர்:
ஊறுகாய், வடகம்ன்னு அப்பளத்துக்கு இலவசமா கொடுக்குறாங்களே அது எங்களுக்குத்தானே லாபம்?
ஆ..ஆ..ஆ இது வியாபார தந்திரம்.
இதுல விடுற மாதிரி விட்டு, பொட்டலத்தில் உள்ள அப்பளத்தின் எண்ணிக்கைய குறைச்சு, விலைய ஏத்தி ரெண்டு மடங்கு லாபம் பாத்துறுவாங்க
இன்னொரு நாடகம் ஒன்னையும் நடத்துவாங்க. இந்த அப்பளத்தை பொறிக்காமலேயே சாப்பிடலாமுன்னும், ஒரு வாய் சோறு ஒரு கடி அப்பளமுன்னும் சொல்லுவாங்க
பொறிக்காம சாப்பிட இது என்ன பனிக்கூழா? மேலும் சிங்கம் மார்க் அப்பளத்தை சோறு சாப்பிடும்போது மட்டும் இல்லை மோர் குடிக்கும் போது கூட கடிச்சுக்கலாம். இல்லங்கள் முதல் விருந்துகள் வரை எந்த பதார்த்தம்
இலையில் இருந்தாலும், வட்ட நிலா போன்ற சிங்கம் மார்க் அப்பளத்தை வைக்கும் போது,
இலைகள் பிரகாசிக்கும் என்பது யதார்த்தம்.
மற்றொருவர்:
சிங்கம் மார்க் அப்பளம் என்னன்ன மாதிரி எல்லாம் சந்தைக்கு வருது?
குழல் அப்பளம், விரல் அப்பளம், பல வண்ண அப்பளம், நட்சத்திர அப்பளம் இப்படி பலவகையில வருது. சிங்கம் மார்க் அப்பளத்தை நீங்கள் உடைத்து நொறுக்கி சாப்பிடலாம்.
மற்றொருவர்:
சிங்கம் மார்க் அப்பளத்துல அப்படி என்ன சிறப்பு இருக்குது?
சிங்கத்த புகைப்படத்துல பார்த்திருப்பீங்க
திரைப்படத்துல பார்த்திருப்பீங்க
தொலைக்காட்சியில பார்த்திருப்பீங்க, ஏன்
கூண்டுல கூட பார்த்திருப்பீங்க
சிங்கம் மார்க் அப்பளத்தை சாப்பிட்டு பார்த்துருக்கீங்களா?
பொறிச்சவுடனே சுடசுட சிங்கம் மார்க் அப்பளத்தை
ஒரு கடி கடிச்சா.. சும்மா அதிருமுல்ல
மற்றொருவர்:
இப்போ நாங்க என்ன செய்யனும்?
தரம் இல்லாத அப்பளத்துக்கு எதிராக போராட வேண்டும். நம் வீடு வீடாக தெருத்தெரு செல்வோம். உண்மையை உலகுக்கு எடுத்து சொல்வோம். சிங்கம் மார்க் அப்பளத்தையே பொரிப்போம்
என் அப்பளம். என் உரிமை.
புரட்சி போராட்டம் நடத்துவோர் சிங்கம் மார்க் அப்பளம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home